தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அசுரன்.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த படத்தை கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்தார். தொடர்ச்சியாக நாவல்களை வைத்து படமெடுப்பதில் கைதேர்ந்தவராக இந்த படம் முதல் வெற்றிமாறன் பெயரெடுத்த நிலையில் இந்த படம் தமிழின் சிறந்த மாநில மொழித் திரைப்படத்துக்கான தேசிய விருதினை பெற்றது.
இதேபோல் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் தனுஷ்க்கு கிடைத்தது. முன்னதாக நடிகர் தனுஷ் வெற்றிமாறனுடன் இணைந்து போல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அசுரன் படத்தில் நடித்தார். பின்னர் வடசென்னையிலும் நடித்திருந்தார். இந்நிலையில் தனுஷ் மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தற்போது வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது.
இதனிடையே அசுரன் திரைப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் டகுபாட்டி நடிப்பில் நரப்பா என்கிற பெயரில் உருவாகி வருகிறது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான இந்த கதையினை தமிழில் வெற்றிமாறன் இயக்கியதை தொடர்ந்து தெலுங்கில், வெங்கடேஷ் டகுபாட்டி நடிப்பில் ஸ்ரீகாந்த் அடேலா இயக்குகிறார். பிரியாமணி, கார்த்திக் ரத்னம், பிரகாஷ் ராஜ், சம்பத் ராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடத்தை ஏற்கின்றனர். இப்படத்துக்கு மணி சர்மா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முக்கிய ஸ்டில்ஸ்களை வெளியிட்டுள்ள வெங்கடேஷ் டகுபாட்டி ‘ஹேப்பி உகாதி’ பண்டிகை என பகிர்ந்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த படம் மே 14-ஆம் தேதி தெலுங்கில் வெளியாகவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
ALSO READ: "கர்ணன் படத்தில் தனுஷ் ஓவியத்த வரஞ்சுது இவர்தானா?"... Art Director Exclusive Interview!