நடிகர் கருணாஸ் மற்றும் நடிகை, பாடகி கிரேஸ் கருணாஸ் ஆகியோரது மகன் கென் கருணாஸ்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, டீஜே அருணாசலம் மற்றும் பலர் நடித்த தேசிய விருது பெற்ற திரைப்படம் ‘அசுரன்’. இந்த படத்தில் சிவசாமியாக வரும் தனுஷ்க்கு மகனாக ‘சிதம்பரம்’ எனும் முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் நடித்து புகழ் பெற்றவர் இளம் நடிகர் கென் கருணாஸ்.
இந்நிலையில் கென் கருணாஸ் மற்றும் அவரது தாயார் கிரேஸ் நடிக்கும் ‘வாடா ராசா’ எனும் மியூசிக்கல் ஆல்பம் குறித்த வேற லெவல் அப்டேட் வெளியாகியுள்ளது. கென் கருணாஸ், கிரேஸ் கருணாஸ், ப்ரீத்தி ஷர்மா நடிக்கும் இந்த ஆல்பம் சோனி லேபிளுக்காக தி ரூட் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
கென் மற்றும் ஈஷ்வர் எழுதி, இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலை குட்டி பட்டாஸ் பாடலை உருவாக்கிய படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். அதன்படி வெங்கி இயக்கியுள்ள இந்த வீடியோ பாடலுக்கு, சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதே படக்குழுவினர் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அஸ்வின் நடித்து வெளியான குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடலை சோனிக்காக உருவாக்கினர். இந்நிலையில் ‘வாடா ராசா’ வீடியோ ஆல்பம் ஆகஸ்டு 19-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
Also Read: நடிகர் உதயநிதி ஸ்டாலின்.. சினிமாவில் பெற்ற செம்ம மாஸான ‘சிறப்பு அடைமொழி’!