சமீபத்தில் வெளியாகியுள்ள 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் பார்க்கச் செல்லும் அரசு ஊழியர்களுக்கு அரை நாள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்து இருக்கிறார் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா.
கொட்டுங்க டும் டும் டும்!!... திருமண பந்தத்தில் இணையும் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்..
தி காஷ்மீர் ஃபைல்ஸ்
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1990-களில் காஷ்மீரில் பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும் அங்கிருந்து அவர்கள் வெளியேற பாடுபட்டதையும் கதைக் களமாக கொண்டுள்ளது இந்தப் படம். விவேக் அக்னிகோத்ரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
படம் பார்த்த முதல்வர்
அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அம்மாநில கேபினட் அமைச்சர்களோடு தியேட்டரில் நேற்று இந்தப் படத்தை பார்த்திருக்கிறார். அதன் பின்னர் அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில்," தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை எனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பார்த்தேன். காஷ்மீர் பண்டிட்களின் இனப்படுகொலை மற்றும் அவர்களின் வெளியேற்றம் மனிதகுலத்தின் மீது ஒரு கறை. அதனை இப்படத்தில் இதயத்தை கனக்கச் செய்யும் விதமாக சித்தரித்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை காணச் செல்லும் அரசு ஊழியர்களுக்கு பாதி நாள் விடுமுறை அளிக்கப்படும்" என சர்மா இன்று அறிவித்துள்ளார்.
விடுப்பு எடுப்பவர்கள் தங்களது உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், அடுத்தநாள் டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பெருகும் வரவேற்பு
மார்ச் 11 ஆம் தேதி வெளியான இந்த படத்தினை இந்திய பிரதமர் மோடி பார்த்துவிட்டு இப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரியை நேரில் அழைத்துப் பாராட்டினார். அதேபோல, திரிபுரா மாநில முதல்வர் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்திருக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் இந்த படத்தினை காணச் செல்லும் காவல்துறை அதிகாரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்திருக்கிறார். கோவா மாநிலத்தில் அதிக அளவில் இந்தப் படத்தினை திரையிட இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தெரிவித்துள்ளார்.
அரபிக்குத்து பாட்டுக்கு நண்பர்களுடன் செமயான டான்ஸ் ஆடிய சம்யுக்தா ஹெக்டே! வேறலெவல் வீடியோ