கவின், தேஜூ நடிப்பில் சிவாங்கி பாடிய ASKU MAARO பாடல் வெளியானது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த கவின் தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நட்புன்னா என்னனு தெரியுமா படத்தில் நடித்த கவின், அந்த படத்தைத் தொடர்ந்து லிஃப்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கவின், தேஜூ அஸ்வினி, சிவாங்கி நடித்துள்ள Asku Maaro எனும் மியூசிக் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சொனி மியூசிக் வெளியீட்டில் தரண் குமார் இசையில் சிவாங்கி, தரண்குமார் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தான் இப்போது வெளியாகியுள்ளது. Dongil Jumbo இயக்கியுள்ள இந்த பாடலை ‘ஒரசாதே’ பாடலை எழுதிய கு.கார்த்திக் எழுதியுள்ளார்.

ஒரு பப் செட்டப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த பாடலில் செம்ம ஸ்டைலாக கவின் வருகிறார். தவிர அவருடன் வேற லெவலில் தேஜூ அஸ்வினி ஆடுகிறார். அதுமட்டுமா.? நம்ம சிவாங்கியும் இந்த பாடல் காட்சியில் இடம் பெற்று நடனம் ஆடியுள்ளார். இந்த பாடலுக்கு நடனப்பயிற்சி கொடுத்துள்ள சாண்டி மாஸ்டரும் ஒரு காட்சிக்கு வருகிறார்.

ALSO READ: இன்றைய விஜய் டிவி சீரியலில் சிவாங்கி & குக் வித் கோமாளி பிரபலங்கள்!.. எந்த சீரியல் தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

AskuMaaro Song Kavin Teju Ashwini Sung by sivaangi

People looking for online information on AskuMaaro, Kavin, Ku Karthi, Sandy, Sivaangi, Teju Ashwini will find this news story useful.