VIDEO: சிவாங்கி பாடி, நடித்துள்ள கவின், தேஜூ அஸ்வினியின் ASKUMAARO .. VIRAL ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி மூலமாக திரை மற்றும் டிஜிட்டல் ஊடக உலகில் தங்களுக்கென்று அடையாளத்தை நிறுத்தி, தனித் திறமைகளை நிரூபித்துள்ள பிரபலங்கள் பலரும் உண்டு.

அவ்வகையில் தற்போது விஜய் டிவி சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த கவின் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். நட்புன்னா என்னனு தெரியுமா திரைப்படத்தில் நடித்த கவின் தற்போது லிஃப்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனிடையே சொனி மியூசிக் வெளியீட்டில் கவின், தேஜூ அஸ்வினி, சிவாங்கி நடித்துள்ள Asku Maaro எனும் பாடல் ஒன்று வெளியாக உள்ளது. தரண் குமார் இசையில் சிவாங்கி, தரண்குமார் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை Dongil Jumbo இயக்கியுள்ளார்.

இந்த பாடலை ‘ஒரசாதே’ பாடலை எழுதிய கு.கார்த்திக் எழுதியுள்ளார். ஒரு பப் செட்டப்பில் எடுக்கப்பட்டதாய் தெரிகிற இந்த பாடலில் தேஜூ அஸ்வினி ஆடுவதும், அங்கு கவின் செம்ம ஸ்டைலாக வருவதுமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதுடன், இந்த பாடலில் சிவாங்கி தனக்கே உரித்தான ட்ரேட் மார்ட் எக்ஸ்பிரஷன்களை கொடுத்து நடித்துள்ளார்.

இந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் சிவாங்கி கொடுக்கும் ஒரு ஷாக் ரியாக்‌ஷன் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனப்பயிற்சி கொடுத்துள்ளார். 

ALSO READ: "சிரிச்சுட்டேன்.. எடிட்டர்ஸ் வேற லெவல்"! .. CookWithComali2 பிரபலத்தை குறிப்பிட்டு சிவாங்கி Viral ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

AskuMaaro Promo Kavin Teju Ashwini sivaangi Sung and acted

People looking for online information on Kavin, Ku Karthi, Sivaangi, Teju Ashwini, VijayTelevision will find this news story useful.