நடிகை அசின் மகளின் பிறந்தநாள் விழா.. குழந்தையின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் அசின்.

Advertising
>
Advertising

Also Read | THUNIVU: இயக்குனர் H. வினோத் உடன் பிரபல நடிகர்.. 'துணிவு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! வைரல் ஃபோட்டோ

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், சூர்யா, பாலகிருஷ்ணா, ஜெயம் ரவி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அசத்திய, இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்து திரைத்துறையை கலக்கி வந்தார் அசின். குறிப்பாக ஆமிர் கான், சல்மான் கானுடன் இணைந்து பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் நடிகர் விஜய்யின் காவலன் படத்தில் நடித்து இருந்தார்.

கஜினி படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அசின். பின்னர் London Dreams, Housefull 2, Khiladi 786 ஆகிய பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து இவர் 2016ல் தொழிலதிபர் மைக்ரோ மேக்ஸ் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருக்கும் அசின் சமூக வலைத்தளங்களில் எப்போதாவது ஒரிரு பதிவுகளை பதிவிடுவார்.

இந்நிலையில் நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் அரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  ஐந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு மகளை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "எங்கள் வாழ்வின் ஒளி. ஆரின் ஐந்தாவது பிறந்தநாள் வாழ்த்துகள்! நாங்கள் உன்னை எல்லையற்ற, அளவிட முடியாத, அபரிமிதமாக நேசிக்கிறோம்.  கனிவான இதயம், பிரகாசமான புன்னகை, நகைச்சுவையான கருத்துக்கள் மற்றும் அழகான நடன அசைவுகள் கொண்ட பிரகாசமான குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்... நீ வளர்வதை நாங்கள் விரும்புகிறோம்!" என அசின் பதிவிட்டுள்ளார்.

 

Also Read | நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்.. சென்னையில் எங்கே? எப்போ? அவரே வெளியிட்ட அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Asin Rahul Sharma Daughter Arin Rayn Birthday Party

People looking for online information on Asin, Asin Daughter Arin Rayn Birthday Party, Asin Rahul Sharma Daughter, Rahul Sharma will find this news story useful.