குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் குறிப்பாக சீசன்-2 மூலம் பிரபலம் ஆனாலும் நடிகர் அஸ்வின் அதற்கு முன்பில் இருந்தே குறும்படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.
அப்படி விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நினைக்கத் தெரிந்த மனமே. தற்போது திரைப்படங்கள், தனி ஆல்பங்களில் நடித்து வந்தாலும் அஸ்வின் இந்த தொடரிலும் உற்சாகமாகவே நடித்துள்ளார்.
அந்த தொடரின் எபிசோடுகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அஸ்வின் ஆசையாக சாப்பிட பிரியாணி வாங்கிக்கொண்டு வந்து சாப்பிட முயல, அப்போது எதிர் ஃபிளாட்டில் இருக்கும் நாயகி கதவைத் திறக்க முடியாமல் தவிக்கும் சத்தம் கேட்க, உடனே அஸ்வின் பிரியாணியை தம் அறையில் வைத்துவிட்டு அறையை சாத்திவிட்டு நாயகியின் ஃபிளாட் கதவை சாவி போட்டு திறக்க முயற்சிக்கிறார்.
ஆனால் அஸ்வின் தம் ஃபிளாட்டின் கதவை சாத்தும்போது சாவி உள்ளேயே இருப்பதை அறிந்திருக்கவில்லை. நாயகிக்கு உதவி செய்த பெருமையில் தம் ஃபிளாட் கதவை வந்து திறக்க முயலும்போது தான் தன் ஃபிளாட்டின் சாவி உள்ளேயே இருப்பதால் கதவு லாக் ஆகிக் கொண்டதை புரிந்துகொண்டு, ‘அய்யோ.. அடுத்தவங்களுக்கு உதவி செய்யப்போய், நீ இப்படி நிக்குறியேடா... பிரியாணி வேற உள்ள மாட்டிக்கிச்சே.. பசிக்குதே’ என புலம்புகிறார்.
பின்னர் செக்யூரிட்டியிடமும் டூப்ளிகேட் சாவி இல்லாததால் அடுத்த நாள் பிளம்பரை வரச்சொல்லிவிட, இதை கவனித்த ஹீரோயின் தனக்கு உதவி செய்யப் போய் இப்படி சிக்கலில் மாட்டிக்கொண்ட அஸ்வினுக்கு தன் ஃபிளாட்டிலேயே இரவு தங்கவும் தூங்கவும் இடமளிக்கிறார். இந்த படுசுவாரஸ்யமான நினைக்கத் தெரிந்த மனமே சீரியலின் எபிசோடு தான் இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
ALSO READ: உயிர் காக்கும் பணியில் இறங்கிய பிரபல டெலிவிஷன் தம்பதி!.. தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!