அசோக் செல்வன் நடித்த புதிய திரைப்படம்.. பிரபல TV சேனலில் ஒளிபரப்பு! எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 5 ஏப்ரல் 2022: மிக கவனமாக தேர்வு செய்யப்படும் சிறப்பான திரைப்படங்களைக் கொண்டு பார்வையாளர்களை தன்வசப்படுத்தியிருக்கும் கலர்ஸ் தமிழ்,  சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தை உலகளவில் சின்னத்திரையில் முதன்முறையாக வழங்குகிறது. இளம் தலைமுறையினரின் இதயத்துடிப்பான அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், நடிகர்கள் நாசர், கே. மணிகண்டன், அபி ஹாசன், அஞ்சு குரியன், ரியா, கே.எஸ். ரவிக்குமார், ரித்விகா மற்றும் சிவராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

ஹைதராபாத்தில் அஜித்... "ரசிகரோடா இவ்ளோ இயல்பா இருக்காரே?" .. நெகிழும் ரசிகர்கள்..

மாறுபட்ட வெவ்வேறு நிலைகளிலிருக்கும் நான்கு நபர்களின் வாழ்க்கை மீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு சாலைப்போக்குவரத்து விபத்தை மையப்புள்ளியாகக் கொண்டு இதன் திரைக்கதை நகர்கிறது. தவறுக்கு காரணமாக இருந்தது குறித்த குற்றஉணர்வு, வருத்தம் மற்றும் பாதிப்பின் தீவிரத்தையும், யதார்த்த நிலையையும் உணர்தல் என்ற வேறுபட்ட உணர்வுகளை இந்நபர்கள் அனுபவிக்கின்ற இந்நபர்களது எண்ண ஓட்டங்களையும், நிகழ்வுகளையும் இத்திரைப்படம் அழகாக சித்தரிக்கிறது.



அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம், சட்டென்று கோபப்படுகின்ற பிரச்சனைகள் உள்ள, ஆனால் கனிவும், இரக்கமும் உள்ள நபரான விஜயகுமார் (அசோக் செல்வன் நடிப்பில்) மற்றும் அவரது தந்தை செல்வராஜ் (நாசர் நடிப்பில்) ஆகியோரது வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது. மற்றவர்களது முடிவுகளை விட தனது முடிவுகள் தான் அதிக முக்கியமானது என்று நம்புகின்ற நபர் என்ற பெயர் வாங்கியிருக்கும் விஜயகுமார், அவரது திருமண அழைப்பிதழை வினியோகிக்க தனது அப்பாவோடு உடன் செல்வதற்கு ஒருநாள் விடுப்பெடுக்க மறுத்துவிடுகிறார். எனினும் இந்த முடிவானது அவரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடுமென்றோ மற்றும் இன்னும் பலரின் வாழ்க்கையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்று சிறிதளவு கூட விஜயகுமார் கருதியதில்லை. நடிகராக வளரவேண்டுமென்ற உறுதியுடன் களமிறங்கும் பிரதீஷ் (அபி ஹாசன் நடிப்பில்) – ன் அறிமுகப்பேச்சு தவறான காரணங்களுக்காக வைரலாகிறது. சமூக ஊடகங்களில் பலரின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகிறது. நிகழ்ந்த விபத்தில் பிரதீஷ் சிக்கிக்கொள்ள அவரது நடிகராக வேண்டுமென்ற கனவு ஏறக்குறைய தவிடுபொடியாகிறது. இதுமட்டுமின்றி, வெளிநாட்டுக்கு திரும்பிச்செல்ல விரும்புகின்ற ஒரு மென்பொருள் பொறியாளரான பிரவீண் (பிரவீண் ராஜா நடிப்பில்) வாழ்க்கை நிகழ்வுகளும் திரைக்கதையில் முக்கியமானதாக இடம்பெறுகின்றன. இதே நேரத்தில் ஒரு ஹவுஸ்கீப்பிங் சூப்பர்வைசராகப் பணியாற்றும் ராஜசேகர் (மணிண்டன் நடிப்பில்), அவரது பணியில் உரிய அங்கீகாரமும், கௌரவமும் பெறுவதற்கு தீவிரமாக முயற்சிக்கிறார். இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அந்த சாலை விபத்தின் மூலம் எப்படி சிக்கிக்கொள்கின்றனர் மற்றும் விதி அவர்களை எங்கு அழைத்துச்செல்கிறது என்பதே இத்திரைக்கதையின் மைய அம்சமாக இருக்கிறது.



இத்திரைப்படத்தின் இயக்குனர் விஷால் வெங்கட் இதுபற்றி கூறியதாவது: “திரைப்படத் துறையில் எனது முதல் திரைப்படமாக இருப்பதால், சில நேரங்களில் சில மனிதர்கள் எனது பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இருக்கிறது. படத்தின் தலைப்பு சுட்டிக்காட்டுவதைப்போல வாழ்க்கையின் ஏதாவது ஒரு புள்ளியில் ஒருவர் மற்றொருவரோடு குறுக்கே பாதையைக் கடக்கின்ற வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையை இத்திரைப்படம் காட்டுகிறது. அனுபவமும், திறனும் மிக்க நடிகர்கள் மற்றும் இத்திரைப்பட உருவாக்கத்தில் பங்கேற்ற ஒட்டுமொத்தக் குழுவின் சிறப்பான பங்களிப்பும் தான் இத்திரைப்படத்திற்கு வலுசேர்க்கிறது; கிளைமேக்ஸ் காட்சி வரை திரையோடு பார்வையாளர்களை கட்டிப்போடச் செய்திருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இத்திரைப்படம் ஒளிபரப்பாவது எனக்கு அதிக மகிழ்ச்சியளிக்கிறது. பார்வையாளர்களுக்கு இந்த வாரஇறுதி நாளை மகிழ்ச்சியான பொழுதுபோக்கைத் தரும் நாளாக இத்திரைப்படம் ஆக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”



இத்திரைப்பட நாயகன் அசோக் செல்வன் பேசுகையில், “இத்திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அனுபவிக்கின்ற உணர்வுகளை மிகச்சிறப்பாக இது சித்தரித்திருப்பதால் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் எப்போதும் இருக்கும். நான்கு வெவ்வேறு மனிதர்களது வாழ்க்கை நிகழ்வுகளை ஒன்றாக சேர்த்து ஒரேயொரு சம்பவத்தின் மூலம் அவர்களை இணைத்திருக்கும் இத்திரைக்கதை, ஒரு மாயாஜால அற்புதம். உணர்வுகளையும், எண்ணங்களையும் சுயஆய்வு செய்துகொள்ளும் ஒரு பயணத்தில் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் பார்வையாளர்களை அழைத்துக் செல்கிறது. அத்துடன், நிறைவான உணர்வைத் தரக்கூடிய திரைப்படமாகவும் இது அமைந்திருக்கிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இத்திரைப்படம் ஒளிபரப்பாகும் என்பதை அறிவது மகிழ்ச்சியளிக்கிறது. பார்வையாளர்களின் மனதில் வலுவான தாக்கத்தை இத்திரைப்படம் உருவாக்கும் என்பது நிச்சயம்.”

விதியின் விளையாட்டால் ஒருவர் மற்றவரது வாழ்க்கையில் குறுக்கிடுகின்ற நான்கு தனிநபர்களின் வாழ்க்கை கதையை கண்டு ரசிக்க 2022 ஏப்ரல் 10 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மறவாமல் டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம்.. அல்லு அர்ஜூன் பிறந்தநாளில் வெளியான சூப்பர் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Ashok Selvan’s Sila Nerangalil Sila Manidhargal to have a World Television Premiere on Colors Tamil

People looking for online information on Ashok Selvan, Sila Nerangalil Sila Manidhargal, Vishal Venkat will find this news story useful.