சென்னை: மன்மத லீலை படத்தின் வெளியிட்டு தேதியை ப்டக்குழு வெளியிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு கடைசியாக சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி இருந்தார். Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் கடந்த ஆண்டு (25.11.2021) அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியது. V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். இந்த படம் 2021 டிசம்பர் 24 அன்று முதல் SonyLIV OTT- யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன், ஷங்கர், அல்போன்ஸ் புத்ரன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு மன்மத லீலை படத்தை இயக்கி முடித்துள்ளார்.
மாநாடு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ளார். இதன் காரணமாகவே இந்த படத்தின் துணை டைட்டிலில் வெங்கட்பிரபு Quickie என போடப்பட்டுள்ளது. இந்த படம் வெங்கட்பிரபுவின் 10வது படமாகும்.
இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார். 'மன்மத லீலை' திரைப்படத்தில் அசோக் செல்வனுடன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வெங்கட்பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் இந்த படத்தில் இசையமைக்கவில்லை. இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். இதுவரை வெங்கட் பிரபு படத்திற்கு, பிரவீன் கே.எல் தான் எடிட்டிங் பணிகளை மேற்கொள்வார். ஆனால், இந்த 'மன்மத லீலை' திரைப்படத்தில் வெங்கட் ராஜன் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.
இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரத்யேக போஸ்டருடன் இந்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.