“பொண்ணா? பேயா?”.. அஷோக் செல்வன் - ப்ரியா பவானி ஷங்கரின் 'HOSTEL'.. வெளியான ரகளையான TEASER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஷோக் செல்வன், ப்ரியா பவானி ஷங்கர், சதீஷ், முனீஷ் காந்த், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஹாஸ்டல்’ எனும் புதிய திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் அஷோக் செல்வனின் நடிப்பில் வெளியான படம், ‘ஓ மை கடவுளே’. இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஹாஸ்டல் திரைப்படத்தில் பிரியா பவனி ஷங்கருடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த டீசரில், அஷோக் செல்வனின் ஹாஸ்டலில் தங்குவதற்கு ப்ரியா பவானி ஷங்கர் உதவி கேட்க, ஹாஸ்டலில் இருக்கும் வாட்ச்மேன் முனீஷ் காந்த், ஃபாதராக வரும் நாசர் உள்ளிட்டோரை சமாளிக்க, அஷோக் செல்வன், தன் நண்பர்கள் சதீஷ், கலக்கப்போவது யாரு யோகி உள்ளிட்டோருடன் சேர்ந்து தகிடுதத்தம் பண்ணுகிறார்.

இறுதியில் பேய் வருவது போல், செம்ம ரகளையாகவும் காமெடியாகவும் டீசர் முடிகிறது.  இந்த படத்துக்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். போபோ சஷி இசையமைக்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: "உறியடி" விஜய்குமார் நடிக்கும் படத்தில் கைகோர்க்கும் ‘96’ பட பிரபலம்! செம்ம காம்போ!

தொடர்புடைய இணைப்புகள்

Ashok Selvan Priya Bhavani Shankar hostel movie teaser

People looking for online information on Ashok Selvan, HostelTeaser, Priya Bhavani Shankar, Sathish will find this news story useful.