தமிழ் சினிமாவின் பெஸ்ட் முத்தக் காட்சி இதுதான்… அசோக் செல்வன் OPEN TALK பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள மன்மத லீலை திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வெளியாகிறது.

Ashok selvan open talk interview about manmadha leelai
Advertising
>
Advertising

வெங்கட்பிரபுவின் மன்மதலீலை…

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிக்கும் மன்மத லீலை திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ஏற்கனவே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த படம் ஆண்கள் கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஸ்டேட்டஸ் மூலமாக தெரிவித்துள்ளார்.

Ashok selvan open talk interview about manmadha leelai

18+ பிளஸ் படம்…

இந்த படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை இளைஞர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. நிறைய முத்தக் காட்சிகள் மற்றும் 18+ பிளஸ் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தன. அதனால் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் ஆபாசமாக இல்லாமல் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் என இயக்குனர் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

அந்த மாதிரி படம் கிடையாது…

இந்த படம் பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு ‘என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்ற போது இந்தக் கதை வந்தது, அருமையான கதை. அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார். . இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.’ எனக் கூறியுள்ளார்.

அசோக்செல்வன் நேர்காணல்….

இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள அசோக் செல்வன் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு எக்ஸ்க்ளூஸிவான நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் மன்மதலீலை பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த படத்தில் முத்தக் காட்சிகளில் நடித்துள்ள அவரிடம் தமிழ் சினிமாவிடம் பெஸ்ட் முத்தக் காட்சி எது என்ற கேள்வி கேட்கப்பட்ட போது ‘விருமாண்டி படத்தின் காட்சிதான்’ எனக் கூறியுள்ளார். இதுபோல பல விஷயங்களை மனம்திறந்து பேசியுள்ள அந்த நேர்காணல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பெஸ்ட் முத்தக் காட்சி இதுதான்… அசோக் செல்வன் OPEN TALK பேட்டி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ashok selvan open talk interview about manmadha leelai

People looking for online information on Ashok Selvan, Manmadha Leelai, Premgi, Venkat Prabhu will find this news story useful.