மூன்று பிரபல கதாநாயகிகளுடன்.. 3 வேடங்களில் அசோக் செல்வன்.. வெளியான புது படத்தின் ROMANTIC டீஸர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் மிகப் பெரிய படங்களை  தயாரித்த Viacom18 studios,  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”.

Advertising
>
Advertising

Also Read | VIDEO: திருச்செந்தூரில் நடிகர் வடிவேலு.. முருகன் கோயிலில் வேல் சாற்றி வழிபாடு! வைரல் போட்டோ

இந்த படம் தெலுங்கில் “ஆகாஷம்”என பெயரிடப்பட்டுள்ளது.  Rise East Entertainment நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.  இப்படத்தை அறிமுக இயக்குனர் Ra.கார்த்திக் இயக்கியுள்ளார்.

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது. வண்ணமயமான ஒளிப்பதிவு மற்றும் ரம்மியமான பின்னணி இசையுடன் டீஸர் அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகை ரீது வர்மா, சுபா எனும் கதாபாத்திரத்திலும், அபர்ணா பாலமுரளி, மதி  எனும் கதாபாத்திரத்திலும், ஷிவாத்மிகா மீனாக்ஷி எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். அசோக் செல்வன் மூன்று வேடங்களில் வீரா, அர்ஜூன், பிரபா ஆகிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கும் இப்படம், சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மதுரை, பொள்ளாச்சி என  இந்தியாவின் பல்வேறு அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க,  விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Also Read | மாலத்தீவு கடற்கரையில் நடிகை அமலாபால்.. பிரபல நட்சத்திர விடுதியிலிருந்து வெளியிட்ட SUPER PHOTOS!

மூன்று பிரபல கதாநாயகிகளுடன்.. 3 வேடங்களில் அசோக் செல்வன்.. வெளியான புது படத்தின் ROMANTIC டீஸர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ashok Selvan Nitham Oru Vaanam Movie Teaser Released

People looking for online information on Ashok Selvan, Nitham Oru Vaanam Movie, Nitham Oru Vaanam Movie Teaser will find this news story useful.