"நீங்க பேசுனது தப்பான விஷயம்".. அசல் VS ஷிவின்.. மீண்டும் அனல் பறந்த வாக்குவாதம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Asal Kolar Argument with Shivin about his Eviction In BB6
Advertising
>
Advertising

Also Read | "பிக்பாஸ்-ல எனக்கு ரொம்ப பிடிச்சவங்க இவங்க தான்".. வெளியேறிய பின்னர் உருக்கமாக பேசிய ரச்சிதா..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

Asal Kolar Argument with Shivin about his Eviction In BB6

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். இந்நிலையில், வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அசல் கோலார் - ஷிவின் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

அந்த சூழ்நிலையில் பேசும் அசல்,"நீங்க ஒரு விஷயம் சொன்னீங்க. அது தப்பான விஷயம். மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்காங்க. நம்ம வீட்ல இருக்கவங்க பார்க்காததை மக்கள் பார்த்திருக்காங்க. அதுனால தான் நான் வெளில போய்ட்டேன்னு சொன்னீங்க. அப்போ, அந்த மாதிரி ஒரு விஷயமே நடக்காதபோது, இப்படியும் ஒன்னு நடந்திருக்கலாம் அப்படின்னு நீங்க மேற்கோள் காட்டுற மாதிரி இருந்துச்சு" என்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் ஷிவின்,"என்கிட்டே கமல் சார் கேட்டாலும் நான் பார்த்தவரைக்கும் இவ்வளவுதான் சார். நான் பார்க்காம யாரு என்ன பேசுனாங்கன்னு எனக்கு தெரியாதுன்னு தான் சொல்லுவேன். மக்கள் பாக்குறது தானே உண்மை. 24 மணி நேரமும் நேரலை போயிட்டு தான் இருக்கு. மக்கள் என்ன நடக்குதுன்னு பார்க்க தானே போறாங்க?" என்கிறார்.

தொடர்ந்து பேசும் அசல்,"மக்கள் பார்க்குறாங்க சரி, ஆனா நடக்காத ஒன்னை நடந்திருக்கலாம்னு சொன்ன மாதிரி இருந்துச்சு உங்க பேச்சு" என்கிறார். அப்போது ஷிவின்,"இந்த விஷயம் நடந்திருக்குன்னு நான் சொல்லியிருந்தா நீ என்னை கேள்வி கேக்கலாம். ஆனா, நம்ம கண்ணுக்கு தெரியாத விஷயம் மக்கள் பார்த்திருப்பாங்கன்னு தான் சொன்னேன். இது ஓப்பன் ஸ்டேட்மென்ட் தான். இதுல என்ன இருக்கு?" என்கிறார். பின்னர் அங்கிருந்த சக போட்டியாளர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.

Also Read | "ஆசையா போய் கட்டிப்புடிச்சேன்.. மூஞ்சில அடிச்சமாதிரி பேசிட்டான்".. கதறியழுத ADK..

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Asal Kolar Argument with Shivin about his Eviction In BB6

People looking for online information on ADK, Asal Kolar, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Shivin, Vijay tv will find this news story useful.