இந்தா வந்துட்டாங்கல்ல!! எலிமினேஷன் ஆன பிரபல போட்டியாளர்களின் மாஸ் ரீ எண்ட்ரி..! BIGG BOSS 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "பிளாக்பஸ்டர் ஹிட்.. ஒவ்வொரு சீனும்".. 'துணிவு' பார்த்த பிறகு பிரபல இயக்குனரின் செம்ம ட்வீட்!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி சுமார் 90 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

முன்னதாக நடந்த Ticket To Finale டாஸ்க்கில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். தொடர்ந்து, ஆறாவது பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷனும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் அவ்வப்போது சிறப்பு விருந்தினர்கள் வந்து போகின்றனர். முன்னதாக அகமது மீரான், சுரேஷ் சக்ரவர்த்தி இந்த நிகழ்ச்சிக்குள் வந்திருந்தார். இந்நிலையில் பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர்.

அவர்கள் போட்டியாளர்களின் நிறைகுறைகளை வெளியில் இருந்து பார்த்த பார்வையாளர்களாக முன்வைப்பார்கள். இந்த நிலையில், தற்போது இதே பிக்பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி ஏற்கனவே எலிமினேட் ஆகி இருந்த போட்டியாளர்கள் வருகை தந்துள்ளனர்.  அதன்படி ராபர்ட் மற்றும் அசல் கோலார் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர்.

Also Read | ஷிவினை பற்றிய ஹேஷ்டாக்ஸ்.. சொல்லியதும் வெட்கப்பட்ட விக்ரமன்.. !

தொடர்புடைய இணைப்புகள்

Asal Kolar and Robert Re Entry in bigg boss 6 tamil

People looking for online information on Asal Kolar, Bigg Boss 6, Bigg boss 6 tami, Rovert will find this news story useful.