"ஊருக்கு போலாம்னு இருந்தேன்.. இனி சென்னை தான்!".. கண்கலங்கிய 'புதுப்பொண்ணு' ஷபானா.. வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் மூலமாக பரவலாக அறியப்பட்டவர் நடிகை ஷபானா.

Advertising
>
Advertising

ஷாபூ என்று சின்னத்திரை வட்டத்தில் செல்லமாக அழைக்கப்படும் ஷபானா பிரபல சின்னத்திரை நடிகர் ஆரியனை எப்போது திருமணம் செய்து கொள்வார் என்கிற கேள்வி இவர்களுடைய ரசிகர்களிடையே தொடர்ச்சியாக இருந்து வந்தது. இந்த நிலையில் ஷபானா மற்றும் ஆரியன் திருமணம் இனிதே நிறைவேறி இருக்கிறது.


இந்த திருமணத்தை ஒட்டி ஒரு வீடியோ பதிவை பகிர்ந்து இருந்த ஷபானா, “நீண்ட நாட்களாக அனைவரும் எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருந்தீர்கள். உங்களுடைய லவ் மற்றும் சப்போர்ட் தான் இன்று ஒரு நல்ல விஷயம் நடக்க காரணமாக இருந்திருக்கிறது. நான் சீரியலில் நடித்து முடித்துவிட்டு ஊருக்கு போகலாம் என்று இருந்தேன். இப்போது சென்னையில் செட்டில் ஆகப்போகிறேன். Mrs ஆகிவிட்டேன். இதற்கு உங்களுடைய தொடர்ச்சியான அன்பும் ஆதரவும் தான் காரணம். உங்களிடம் சொல்லிவிட்டு தான் இதைச் செய்ய வேண்டும் என்றிருந்தேன். அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ஆரியன் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே திருமணத்தில், தாலி கட்டும்பொழுது ஆரியன் ஷபானா டம் கிசுகிசுவாக பேசக்கூடிய காட்சிகளும் வீடியோவாக வெளியாகி வருகின்றன. அவர் தாலிக்கு முத்தம் கொடுத்ததுடன், ஷபானாவிடம் சிரித்தபடி ஏதோ சொல்ல அவர் க்யூட்டாக எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார்.

பலரும் இந்த ரியல் ஜோடி ரீல் வாழ்க்கையிலும், அதாவது ஒரு சீரியலிலும் இணைந்து நடிக்கலாமே என்று கேட்டு வருகின்றனர். தவிர திரைத்துறையில் இருக்கும் பலரும் இவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி வருகின்றனர்.

"ஊருக்கு போலாம்னு இருந்தேன்.. இனி சென்னை தான்!".. கண்கலங்கிய 'புதுப்பொண்ணு' ஷபானா.. வீடியோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Aryan Shabana marriage video emotional Shabana speech

People looking for online information on Aryan, Aryan Shabana marriage, Aryan Shabana wedding, Shabana Aryan wedding, Shabana Shahjahan, TVActress, TVSerial, Wedding will find this news story useful.