ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகும் புதிய படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகும் முன்னணி தமிழ் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர்யா நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தை பா.இரஞ்சித் தயாரித்து இயக்கி இருந்தார்.

70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளே இந்த படத்தின் கதைக்களமாக இருந்தன. இந்த படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை படத்தில் ஆர்யா நடித்தார்.

ஆயுத பூஜைக்கு வெளியான அரண்மனை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் திரையரங்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதனைத்தொடர்ந்து வரும் தீபாவளிக்கு,  இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் 'எனிமி'  படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஆர்யாஅடுத்து நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி என வித்தியாசமான படங்களை இயக்கிய இயக்குனர் சக்தி சௌந்திரராஜன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா தயாரித்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஹாலிவுட் பட பாணியில் சயின்ஸ் பிக்சன் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. இன்று அக்டோபர் 25 திங்கள் கிழமையில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இவர்களுடன் கன்னட நடிகை காவ்யா ஷெட்டியும், சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்த்தில் நடிக்கின்றனர்.

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் டெடி திரைப்படம் கடைசியாக வெளியானது. ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Arya to romance this ‘Ponniyin Selvan’ actress in his NEXT

People looking for online information on Aishwarya Lakshmi, Arya, Kavya Shetty, Simran will find this news story useful.