VIDEO: நடிகை ராஷி கண்ணாவோட சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன சுவாரஸ்யமான பதில்! என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

Arya Sundar c Aranmanai third part movie exclusive interview

இவர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், இப்போது அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார். ராஷி கண்ணா தற்போது தனுஷ் நடிப்பில் 'திருச்சிற்றம்பலம்', கார்த்தி நடிப்பில் 'சர்தார் ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Arya Sundar c Aranmanai third part movie exclusive interview

சன் டிவியில் நேரடி வெளியீடு செய்யப்பட்ட விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்தில் கடைசியாக நடித்த ராஷி கண்ணா, நாளை அக்டோபர் 14 ஆம் தேதி இவர் நடிப்பில்  திரையரங்குகளில் வெளியாகும் 'அரண்மனை 3 ' படத்தின் வெளியீட்டிற்காகவும் காத்திருக்கிறார்.

இதனை முன்னிட்டு நமது Behindwoods சேனலுக்கு பிரத்யேகமாக நடிகை ராஷி கண்ணா பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக தனது காதல், முன்னாள் காதலர் பற்றி, தன்னுடைய கல்லூரி வாழ்க்கை, திரை வாழ்க்கை, சம்பளம், பிடித்த நடிகர் நடிகை, அரண்மனை3 படத்தில் நடித்த அனுபவம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார். வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரண்மனை3 படத்தில் ஆர்யாவுடன், ராஷிக்கண்ணா, சுந்தர்.சி, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் அனைத்து உரிமையை (Rights) உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் கைப்பற்றி உள்ளார். இந்தப்படம் நாளை அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் அரண்மனை3 படத்தை ஆவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார்.  C.சத்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவை UK செந்தில்குமார் செய்துள்ளார். படத்தொகுப்பை ஃபென்னி ஆலிவர் கவனிக்கிறார்.

VIDEO: நடிகை ராஷி கண்ணாவோட சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன சுவாரஸ்யமான பதில்! என்ன தெரியுமா? வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Arya Sundar c Aranmanai third part movie exclusive interview

People looking for online information on Aranmanai3, Arya, Raashi kanna, Sundar C will find this news story useful.