அரண்மனை- 3 படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடல்! எப்படி இருக்கு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘அரண்மனை-3’

இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை-2  படத்தின் முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா நடிக்க, அரண்மனை-3 படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது.

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் சுந்தர்.சி உடன் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவை UK செந்தில்குமார் செய்துள்ளார். படத்தொகுப்பை ஃபென்னி ஆலிவர் கவனிக்கிறார். ஆவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு இப்படத்தினை தயாரித்துள்ளார்.  C.சத்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் நான்காவது சிங்கிள் பாடலான செங்காந்தளே பாடல் இன்று (06.10.2021) வெளியாகி உள்ளது. சத்யா இசையில் இந்த பாடலை பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ளார். பாடகி ரீமா பாடியுள்ளார். மெலடி வகைமையில் அம்மா செண்டிமெண்ட் பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ளது

அரண்மனை- 3 படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடல்! எப்படி இருக்கு தெரியுமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Arya sundar c aranmanai 3 movie fourth single released

People looking for online information on Andrea, Arya, Raashikanna, Sundarc will find this news story useful.