ஆர்யா நடிக்கும் SCI-FI திரைப்படம் 'கேப்டன்'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிக்கும்'கேப்டன்' படத்தின் சென்சார் சர்டிபிகேட் விவரம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | விக்ரம் நடித்த 'கோப்ரா'.. தமிழ்நாட்ல மட்டும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா? ஏரியா வாரியாக முழு LIST!

நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் 'கேப்டன்' படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  .  இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக ஆர்யா நடித்துள்ளார். கேப்டன் வெற்றிச் செல்வன் எனும் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படம், இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. பெற்றோர் மேற்பார்வையுடன் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் இப்படத்தினை காணலாம் என‌ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.‌

"கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, மதன் கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.

"கேப்டன்" திரைப்படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.

 

Also Read | சந்தானம் நடிக்கும் புதிய காமெடி திரைப்படம்.. டைட்டிலுடன் சூப்பர் வெளியான FIRST LOOK POSTER!

தொடர்புடைய இணைப்புகள்

Arya Simran Aishwarya Lekshmi Captain Movie Censored UA

People looking for online information on Aishwarya Lekshmi, Arya, Arya Captain Movie, Captain, Simran will find this news story useful.