முதல் முறையாக குழந்தையின் GLIMPSE வீடியோவை வெளியிட்ட சாயிஷா ஆர்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது குழந்தையின் வீடியோவை முதல் முறையாக நடிகை சாயீஷா வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான நடிகர் ஆர்யா, ‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயீஷாவை,  காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார்.

கஜினிகாந்த்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது.

தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தைக்கு ஆரியானா என பெயரிட்டனர்.

இந்நிலையில் சயீஷா தற்போது டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குழந்தை ஆரியானாவும் இடம்பெற்றுள்ளது. குழந்தையின் முழு முகம் தெரியாமல் இடது ஓரம் மட்டும் தெரிவது போல வீடியோ அமைந்துள்ளது.

டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன் படங்களை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.

இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்

Tags : Arya, Sayyesha

தொடர்புடைய இணைப்புகள்

Arya Sayyesha daughter first video glimpse went viral

People looking for online information on Arya, Sayyesha will find this news story useful.