ஆர்யா நடித்த அரண்மனை-3 படத்தின் OTT ரிலீஸ்! எப்போ தெரியுமா? வெளியான மாஸ் அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரண்மனை (Aranmanai) மற்றும் அரண்மனை-2  படத்தின் முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில்,, இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ‘அரண்மனை-3’.

Advertising
>
Advertising

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  முதல் முறையாக இயக்குநர் சுந்தர்.சி உடன் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை UK செந்தில்குமார் செய்துள்ளார். படத்தொகுப்பை ஃபென்னி ஆலிவர் கவனிக்கிறார். ஆவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு இப்படத்தினை தயாரித்துள்ளார்.  C.சத்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து உரிமையை (All Rights) உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார்.

இந்த படம் கடந்த அக்டோபர் 14 அன்று வெளியானது, கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் நல்ல வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படம் ஒடிடியில் வெளியாக உள்ளது. நவம்பர் 12 அன்று ஜி5 டிஜிட்டல் தளத்தில் இந்த படம் வெளியாகிறது. 

Tags : Arya, Sundar C

தொடர்புடைய இணைப்புகள்

Arya raashi kanna aranmanai 3 ott digital release date announced

People looking for online information on Arya, Sundar C will find this news story useful.