"வாத்தியாரே.. இதான் ட்விட்டர்.. ரத்த பூமி".. "ஆமா கபிலா..".. ஆர்யாவே பதிவிட்ட மீம்ஸ்.. பசுபதியின் REPLY..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப், சஞ்சனா நடராஜன், அனுபமா குமார் மற்றும் பலர் நடிப்பில் பா.ரஞ்சித் எழுதி இயக்கிய திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியானது இந்த திரைப்படம். 1970-களில் மெட்ராஸ் மாகாண குத்துச்சண்டை மரபை அடிப்படையாக வைத்து உண்மையைத் தழுவி எடுக்கப்பட்ட கற்பனை கதையை மையமாகக் கொண்டது. இதில் தமது சார்பட்டா குத்துச்சண்டை பரம்பரை வாத்தியார் ரங்கனான பசுபதியின் உறுதுணையோடு, கபிலனான ஆர்யா பாக்ஸிங் செய்வார். அதன்படி முதலில் டான்சிங் ரோஸ், பிறகு வேம்புலியுடன் அடுத்தடுத்து பாக்ஸிங் செய்வார் கபிலனான ஆர்யா. இறுதியில் அவர் சார்பட்டா பரம்பரை கௌரவத்தை நிலைநிறுத்தி ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை.

இப்படத்தின் ஒரு காட்சியில் தன் வாத்தியார் பசுபதியை(ரங்கன்) சைக்கிளில் அழைத்துச் செல்வார் நடிகர் ஆர்யா (கபிலன்). இந்த காட்சியைக் கொண்டுதான் அண்மையில் சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் வலம் வந்தன. 

இந்நிலையில் நடிகர் ஆர்யாவே தற்போது பசுபதியை சைக்கிளில் அழைத்து வரும் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு ஆரோக்கியமான மீம்ஸை பகிர்ந்துள்ளார் என சொல்லலாம்.

ஆம், படத்தில் பசுபதியை தன்னுடன் சைக்கிளில் அழைத்துச் செல்லும் புகைப் படத்தை பதிவிட்டுள்ள ஆர்யா, இது தொடர்பான தமது ட்வீட்டில், “வாத்தியாரே.. இதான் ட்விட்டர் வாத்தியாரே.. பாக்ஸிங்க விட ரத்த பூமி.. உன்னோட பேர்ல இங்க நிறைய பேரு இருக்காங்கனு தெரிஞ்சதும் ஒரிஜினல் நாந்தாண்டானு உள்ள வந்த பாத்தியா.. உன் மனசே மனசுதான்.. வா வாத்தியாரே இந்த world உள்ள போலாம்” என குறிப்பிட்டு பசுபதியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடியை தமது பக்கத்தில் அறிமுகப்படுத்தி பகிர்ந்துள்ளார்.

இதற்கு ரிப்ளை செய்துள்ள பசுபதி, “ஆமாம்.. கபிலா.. பாக்ஸிங்கே உலகம்னு இருந்துட்டேன்.. பரம்பரைக்கு ஒன்னுனா மொத ஆளா வந்துருவேன்.. நான் உன் சைக்கிள்லயே பின்னாடி உக்காந்துக்கிறேன்.. எல்லா இடத்துக்கும் கூட்டிகினு போ” என பதில் அளித்துள்ளார். இந்த ட்வீட்கள் வைரலாகி வருகின்றன.

சுள்ளான், திருப்பாச்சி, தூள் ஆகிய படங்களில் மிரட்டலான வில்லனாகவும், பின்னர் வெயில், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இந்தியா பாகிஸ்தான் போன்ற படங்களில் காமெடியிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் பசுபதி.

இவற்றைத் தொடர்ந்து நரிகர் அண்மையில் ஹாட் ஸ்டாரில் தமன்னா நடித்து வெளியான நவம்பர் ஸ்டோரி எனும் வெப் சீரிஸிலும், அதைத் தொடர்ந்து தற்போது சார்பட்டா பரம்பரையிலும் தமது உறுதியான நடிப்பை பதியவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 'வந்தியத்தேவன்' கார்த்தி கையிலெடுத்த சமூக பணி.. பரவும் புகைப் படங்கள்.. குவியும் பாராட்டுகள்!

தொடர்புடைய இணைப்புகள்

Arya introdue Vaathiyare pasupathi twitter ஆர்யா பசுபதி

People looking for online information on Arya, Pa Ranjith, Pasupathi, Santhosh Narayanan, Sarpatta Parambarai, Sarpatta Parambarai Tamil will find this news story useful.