BREAKING: ஆர்யா நடிப்பில் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகும் புதிய படம்! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: ஆர்யா நடிப்பில் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

நடிகர் ஆர்யா நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தை பா.இரஞ்சித் தயாரித்து இயக்கி இருந்தார். 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளே இந்த படத்தின் கதைக்களமாக இருந்தன.

இந்த படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை படத்தில் ஆர்யா நடித்தார்.ஆயுத பூஜைக்கு வெளியான அரண்மனை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் திரையரங்கில் ரசிகர்களை கவர்ந்தது. கடந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆன எனிமி படத்தில் வில்லனாக ஆர்யா நடித்திருந்தார்.

கேப்டன் ஆர்யா

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் டெடி திரைப்படம் கடைசியாக வெளியானது. ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து வழங்கும், படைப்பாளி  சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில்  ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு  கேப்டன் என தலைப்பிடப்பட்டது.

ஜெய்பீம் படத்தில் நடிக்க சூப்பர் கண்டிசன் போட்ட பிரபலம்.. அவரே சொன்ன உண்மை

 

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இவர்களுடன் கன்னட நடிகை காவ்யா ஷெட்டியும், சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்த்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

 

அள்ளுதே! Hot போட்டோஷூட் மூலம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த மீரா ஜாஸ்மின்!

"கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார். இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்களில் நிறைவடையும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியீடு வரும் பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இந்த படம் ஹாலிவுட் பட பாணியில் சயின்ஸ் பிக்சன் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Arya Captain nearing completion directed by Shakthi soundarrajan

People looking for online information on Arya, ஆர்யா, சார்பட்டா பரம்பரை, Captain, Shakthi soundarrajan will find this news story useful.