ஆர்யா - ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் புதிய படம்.. TV ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா- ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் புதிய படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கமல் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. வெளியான சூப்பர் அப்டேட்!

டெடி’ படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யாவும், இயக்குநர்  தயாரிப்பாளர் சக்தி சௌந்தர் ராஜனும்,  ‘கேப்டன்’ என்ற  சயின்ஸ்பிக்சன்  திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

'கேப்டன்’ படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், பரத் ராஜ் மற்றும் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து  நடித்துள்ளனர்.

இப்படத்தை  Think Studios நிறுவனம் நடிகர் ஆர்யாவின் The Show People உடன்  இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி,  சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் படப்பிடிப்பின் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கினர்.

D இமான் இசையமைக்கிறார், S.யுவா ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் கார்க்கி (பாடல் வரிகள்), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), R. சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), S.S. மூர்த்தி (கலை), மற்றும் V. அருண் ராஜ் (சிஜி) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி தொலைக்காட்சி சேனலான ஜி தமிழ் கைப்பற்றி உள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.  செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

Also Read | விஷால் - S.J. சூர்யா நடிக்கும் "மார்க் ஆண்டனி ".. ஷூட்டிங்கில் இணைந்த பிரபல முன்னணி நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

Arya Captain Movie TV Rights Bagged by Zee Tamil

People looking for online information on Arya, Arya Captain Movie, Captain Movie, Zee Tamil will find this news story useful.