ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தில் சிம்ரன் கேரக்டர் இதான்.. வெளியான மோஷன் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிக்கும்'கேப்டன்' படத்திலிருந்து சிம்ரன் கேரக்டர் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கோப்ரா படத்தின் இதுவரை காணாத BTS.. 'ஜென்னி' மிருணாளினி ரவி பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்!

நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி உள்ளார்.

"கேப்டன்" திரைப்படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.

ஆர்யா உடன் இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

"கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, மதன் கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.

படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  .  இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக ஆர்யா நடித்துள்ளார். கேப்டன் வெற்றிச் செல்வன் எனும் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்ரன் கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் டாக்டர் கீர்த்தி எனும் ராணுவ டாக்டராக நடிகை சிம்ரன் நடித்துள்ளார்.

 

Also Read | PRINCE படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. ஒளிப்பதிவு செஞ்சது இந்த விஜய் பட கேமராமேனா? ஆஹா

தொடர்புடைய இணைப்புகள்

Arya Captain Movie Simran Character Look Poster

People looking for online information on Arya, Arya Captain Movie, Captain, Simran, Simran Character Look Poster will find this news story useful.