பிரபல OTT-யில் வெளியான ஆர்யா நடித்த 'கேப்டன்'.. எதுல? எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிக்கும்'கேப்டன்' படம் பிரபல OTT-யில்  வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'நானே வருவேன்' படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? சாதனை படைத்த தனுஷ்!

நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான (செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி) கேப்டன் படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி உள்ளார்.

"கேப்டன்" திரைப்படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது.

ஆர்யாவுடன் இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

"கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, மதன் கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.

  இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக ஆர்யா நடித்துள்ளார். கேப்டன் வெற்றிச் செல்வன் எனும் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் தற்போது ஜி5 ஓடிடியில் வெளியாகி உள்ளது. இன்று முதல் ஜி5 தளத்தில் இந்த படத்தினை ரசிகர்கள் காணலாம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | டபுள் ட்ரீட்.. தனுஷ் நடித்த 'நானே வருவேன்' பார்த்த பின் கார்த்திக் சுப்புராஜ் செம ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Arya Captain Movie OTT Release on Zee 5

People looking for online information on Arya, Arya Captain Movie, Captain, Captain Movie OTT Release updates, Zee 5 will find this news story useful.