VIDEO: ஆர்யா நடிக்கும் SCI-FI ஆக்சன் திரைப்படம் 'கேப்டன்'.. வெளியான மிரட்டலான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிக்கும்'கேப்டன்' படத்தின் டிரெய்லர்  வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. நடிகை மரியா வெளியிட்ட சரவெடி அப்டேட்!

நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி உள்ளார்.

"கேப்டன்" திரைப்படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்யா உடன் இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

"கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, மதன் கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.  ராணுவ அதிகாரியாக ஆர்யா நடித்துள்ளார். கேப்டன் வெற்றிச் செல்வன் எனும் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் வேற்றுக் கிரக வாசிகளிடம் சிக்கி தவிக்கும் ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் டிரெய்லர் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. நடிகை சிம்ரன் மற்றும் ஐஸ்வர்யா லெஷ்மி டிரெய்லரில் தோன்றியுள்ளனர்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

Also Read | "நீ என் உலக அழகியே.." உருகிய விக்னேஷ் சிவன்..ஸ்பெயின் நகர வீதிகளில் நடிகை நயன்தாரா போட்டோஷூட்!

VIDEO: ஆர்யா நடிக்கும் SCI-FI ஆக்சன் திரைப்படம் 'கேப்டன்'.. வெளியான மிரட்டலான டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Arya Captain Movie Official Trailer Released

People looking for online information on Arya, Arya Captain Movie, Captain, Captain Movie Trailer will find this news story useful.