ஆஹா..ஆர்யா நடிக்கும் கேப்டன்.. D. இமான் இசையில் யுவன் ஷங்கர் ராஜா குரலில் வெளியான சிங்கிள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது  நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி உள்ளார். 

Advertising
>
Advertising

Also Read | VIDEO: தமிழ் பேசும் ஆமிர்கான்.. வெளியான "லால்சிங் சத்தா" படத்தின் தமிழ் டிரெய்லர்!

“டெடி”  படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

"கேப்டன்" திரைப்படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்யாவைத் தவிர இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

"கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். இன்று (25.07.2022) யுவன் சங்கர் ராஜா  பாடிய "நினைவுகள்" எனும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார். இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.  செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

Also Read | 'வாரிசு' படத்துல மொத்தம் எத்தனை பாட்டு? இசையமைப்பாளர் தமன் கொடுத்த EXCLUSIVE அப்டேட்!

ஆஹா..ஆர்யா நடிக்கும் கேப்டன்.. D. இமான் இசையில் யுவன் ஷங்கர் ராஜா குரலில் வெளியான சிங்கிள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Arya Captain Movie First Single Song Ninaivugal Released

People looking for online information on Arya, Captain Movie, Captain Movie First Single Song, Captain Movie First Single Song Ninaivugal will find this news story useful.