இமான் இசையில்.. ஸ்ரேயா கோஷல் பாடிய டூயட்.. CAPTAIN படத்தின் அடுத்த SINGLE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிக்கும்'கேப்டன்' படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நம்ம ஊரு.. நம்ம கதை... கார்த்தி வெளியிட்ட 'விருமன்' படத்தின் புதிய GLIMPSE!

நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களைத் தொடர்ந்து, அவரது  நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி உள்ளார். 

“டெடி”  படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர்.
"கேப்டன்" திரைப்படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்யாவைத் தவிர இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

"கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, மதன் கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். கடந்த (25.07.2022) அன்று யுவன் சங்கர் ராஜா  பாடிய "நினைவுகள்" எனும் முதல் சிங்கிள் பாடல் வெளியானது. இன்று இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. ஸ்ரேயா கோஷல் & யாசின் நிஜார் இணைந்து இந்த டூயட் பாடலை பாடியுள்ளனர். கைலா என தொடங்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது. 

வரும் செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

Also Read | BREAKING: சூர்யா - பாலா இணையும் 'வணங்கான்'.. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போ? முழு தகவல்

இமான் இசையில்.. ஸ்ரேயா கோஷல் பாடிய டூயட்.. CAPTAIN படத்தின் அடுத்த SINGLE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Arya Aishwarya Lekshmi Captain Movie Second Single

People looking for online information on Aishwarya Lekshmi, Arya, Captain, Captain Movie Second Single will find this news story useful.