BREAKING: அரவிந்த் சுவாமி நடிக்கும் புதிய படத்தின் தெறியான டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் 'தலைவாசல்' செல்வா இயக்கத்தில் புதையல் படத்திற்கு பிறகு நடிகர்  அரவிந்த்சாமியுடன் 'வணங்காமுடி' படத்தில் இணைகிறார்.

இதில் நாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர். இந்த திரைப்படம், 2014-ஆம் ஆண்டில் திரைக்கதை ஒப்புதல் அளித்து, 2017-ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டது. 

சென்னை நுங்கம்பாக்கம், தூத்துக்குடி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. பின்னர் சில காரணங்களால் படத்தின் அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் இன்று ஆகஸ்ட் 3 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

அதன்படி இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. டீசரில் போலிஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்துடன், செம கெத்தான போலிசாக அரவிந்த் சாமி வலம் வருகிறார். 

இதற்கிடையில் நடிகர் அரவிந்த் சுவாமி, கார்த்திக் நரேன் இயக்கத்தில் நவரசா ஆந்தாலஜியில் 'ப்ராஜக்ட் அக்னி' எனும் பகுதியில் நடித்துள்ளார்.

அதுபோக 'ரௌத்திரம்' எனும் பகுதியையும் இயக்கியுள்ளார். 

 

BREAKING: அரவிந்த் சுவாமி நடிக்கும் புதிய படத்தின் தெறியான டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Arvind Swami Vanangamudi movie teaser released

People looking for online information on Arvind Swami, D Imman, Selva, Vanangamudi will find this news story useful.