BREAKING: அருண் விஜய் நடிக்கும் புதிய படம்.. லண்டனுக்கு பிறகு இந்த ஊர்லயா ஷூட்டிங்? செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் & ஏ.எல்.விஜய் இணையும் புதிய படத்தின் அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அடுத்த ட்ரீட்..பிரபல தெலுங்கு இயக்குனருடன் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் சூப்பர் அப்டேட்

சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் 'யானை' & சினம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அதேபோல் சோனி லிவ் தளத்தில் தமிழ் ராக்கர்ஸ் சீரிஸூம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் A.L விஜய் உடன் இணைந்துள்ளார். இந்த புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்றது . ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட லண்டன் படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழு இன்று சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | BREAKING: HIP HOP தமிழா ஆதி நடிக்கும் புதிய SUPER HERO திரைப்படம்.. இந்த தகவல் செம மாஸா இருக்கே!

தொடர்புடைய இணைப்புகள்

Arunvijay AL Vijay Movie London shooting has completed 20 days

People looking for online information on AL Vijay, AL Vijay Movie London shooting, Arun Vijay will find this news story useful.