மறைந்த மனைவிக்கு அருண்ராஜா காமராஜ் மணவாழ்த்து!.. "இந்த வலி யாருக்கும் வரக்கூடாது" ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா இதே 2021-ஆம் வருடம் மே 17-ஆம் தேதி கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார்.

Advertising
>
Advertising

அருண் ராஜா காமராஜ், அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பெருத்த சோகத்தை இந்த மரணம் ஏற்படுத்தியது. பலரும் அருண்ராஜா காமராஜிற்கு அப்போது ஆறுதல் சொன்னதுடன், “திடமாக இருக்க வேண்டும்” என்று சொல்லி தேற்றினார்.

அந்த சமயம் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமது ட்விட்டர் பக்கத்தில், “வெற்றியை மாலையாக சூடிக் கொள்ளும்போது மிக நேர்மையாக மகிழ்வது இணையாள் மட்டுமே. அருண்ராஜா காமராஜ் உங்களின் அடுத்தகட்ட நகர்வைப் பார்த்து ரசிக்க இயலாமல், அவர்கள் கடந்து போய்விட்ட துயரம் எவ்வளவு மோசமானதென அறிவேன். மீண்டு வர இறைவன் பலத்தை தரட்டும். ஆறுதல்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இத்தனை மாதங்கள் கடந்து, தற்போது தமது திருமணநாளில் தன் மறைந்த மனைவிக்கு “வாழ்த்துகள் பாப்பி” என இயக்குநர் அருண்ராஜா காமராஜ் குறிப்பிட்டுள்ளார். இந்த உருக்கமான பதிவை பார்த்த பலரும், “நாங்கள் இருக்கோம் அண்ணா! திடமாக இருங்கள்!” என பின்னூட்டங்களில் ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில் பிரபல இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மகனும் ‘சச்சின்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான ஜான் மகேந்திரன்,   “இந்த பதிவுக்கு பின்னால் இருக்கும் வலி யாருக்குமே வரக்கூடாது” என தமது உருக்கமான பின்னூட்டத்தை பதிவு செய்துள்ளார்.

முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கனா திரைப்படத்தை இயக்கி வெற்றிபெற்ற அருண்ராஜா காமராஜ், தற்போது போனி கபூரின் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் ஆர்டிகள் 15 எனும் இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Arunraja Kamaraj wedding wishes to his late wife emotional

People looking for online information on Arun Raja, Arunraja Kamaraj, அருண்ராஜா காமராஜ், Maanaadu, Maanaadu Tamil, Sindhuja, Suresh Kamatchi, Udhayanidhi Stalin, Wedding anniversary will find this news story useful.