VIDEO: "கண்ணீருடன் அருண்ராஜா காமராஜ் & உறவினர்கள்!".. சிந்துஜாவின் இறுதி அஞ்சலி வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைத்துறையில் தொடர்ந்து கொரோனாவால் நிகழும் மரண சம்பவங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தன.

இதேபோல் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் நெருங்கிய உறவினர்களும் மரணித்து வரும் சம்பவங்களும் பின்னர் தொடர்ந்தன. அதன்படி கங்கை அமரனின் மனைவி மணிமேகலை அண்மையில் காலமானார். இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியின் தாயாரான மணிமேகலை மறைவை அடுத்து சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களும் இரங்கல்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றாக் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண்ராஜா காமராஜ் தொடக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். பின்னர்  கபாலியில் நெருப்புடா பாடல் மூலமும், ராஜா ராணியில் நடிகராக தோன்றியதன் மூலமும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் கனா திரைப்படத்தினை தமது முதல் படமாக இயக்கியிருந்தார். அவர் தமது அடுத்த படமாக ஆர்டிக்கள் 15 எனும் இந்தி படத்தை தமிழில் உதயநிதி நடிப்பில் ரீமேக் செய்துவருகிறார்.

VIDEO: "கண்ணீருடன் அருண்ராஜா காமராஜ் & உறவினர்கள்!".. சிந்துஜாவின் இறுதி அஞ்சலி வீடியோ! வீடியோ

Arunraja kamaraj pays respects sindhuja funeral video

People looking for online information on Arunraja Kamaraj, Arunraja Kamaraja will find this news story useful.