இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இயற்கை எய்தினார்.
Also Read | "ப்ரஸ் மீட்டில் பேசும் போது திரும்ப திரும்ப ரிங் அடித்த போன்.. குணமா சொன்ன அஜித் வைரல் Throwback video
அருண் ராஜா காமராஜ்…
நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பரும் இயக்குனர் நெல்சனின் உதவியாளருமான அருண் ராஜா காமராஜா ’கனா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர். அருண்ராஜா காமராஜா தொடக்ககாலத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். தொடர்ந்து திரைத்துறையில் நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் வலம் வந்த அருண்ராஜா காமராஜா சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் கனா திரைப்படத்தை இயக்கி வெற்றியடைந்தார்.
மனைவியின் மறைவு…
இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பிலான இந்தி படமான ஆர்டிகள் 15 படத்தினை உதயநிதி ஸ்டாலினை வைத்து தமிழில் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்தார். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடைந்து போன அருண் ராஜாவுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினர்.
முதலாம் ஆண்டு நினைவு நாள்…
மனைவிக்கு இழப்புக்குப் பிறகு அவ்வப்போது அவர் தன்னுடைய மனைவி பற்றிய பதிவுகளை சமூகாவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சமீபத்தில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகவலைதளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில் “எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன். ஹேப்பி பர்த்டே பாப்பி” எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து தற்போது அவர் இறந்து ஒரு வருடம் நிறைவடைவதை ஒட்டி அவரின் முதலாம் நினைவுநாளில் மனைவியின் புகைப்படத்தைப் பகிர்ந்து கவிதை ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் ‘
உடனிரு எப்போதும் உடைந்திடா
உண்மையாய்
உடைத்திடா மென்மையாய் ..
ஏதேதோ எண்ணங்கள் எனைச்சூழ
நீயே அரணாய் எனை ஆள..
உடனிரு எந்நாளும் பாப்பி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு தற்போது பரவலான கவனத்தைப் பெற்றுவருகிறது. பலரும் அவருக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8