கடைசியாக 'சைக்கோ' திரைப்படத்தில் நடித்திருந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக நெஞ்சுக்கு நீதி திரைப்படம், வெளியாக உள்ளது.
Also Read | "உண்மையான டான் உதயநிதி சார் தான்" - சிவகார்த்திகேயன் கலகலப்பான பேச்சு - வீடியோ!!
'கனா' படத்தை இயக்கி இருந்த அருண்ராஜா காமராஜ், நெஞ்சுக்கு நீதி படத்தையும் இயக்கி உள்ளார். ஹிந்தியில் வெளியாகி, பெரிய ஹிட் அடித்திருந்த 'ஆர்டிக்கிள் 15' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் 'நெஞ்சுக்கு நீதி' படம்.
கலங்கிய அருண்ராஜா..
வரும் மே 20 ஆம் தேதியன்று வெளியாகவுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் பத்திரிக்கை விழா நடந்தது. இந்த நிகழ்வில் அருண்ராஜாவின் மறைந்த துணைவி சிந்து குறித்து, நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக பேசியபோது, இயக்குனர் அருண் ராஜா தேம்பி அழ தொடங்கினார். உடனடியாக, அவர் அருகில் இருந்த கலைஞர்கள் அவரை தேற்றினர்.
சீரியஸ் படங்கள்..
இந்நிகழ்வில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "நானும் நண்பன் அருண் ராஜாவும் கல்லூரி நேரத்தில் சீரியசாக பேசிக்கொண்டதே இல்லை. இப்போது கனா, அடுத்து நெஞ்சுக்கு நீதி என அவன் எடுக்கும் சீரியஸ் திரைப்படங்களை பார்க்கும் போது "இவன் நம்ம கூட தான் படித்தானா.?" என்று எனக்கே சந்தேகம் வருவதுண்டு.
எனக்கும் ஒரு கதை சொல்லு
இனி அருண் ராஜாவுக்கு கிடைக்கும் ஒவ்வொரு கைதட்டல்களிலும், வெற்றியிலும், ஒவ்வொரு அசைவிலும் சிந்து உடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிந்துவின் இழப்பு, அருண் ராஜாவுக்கு பேரிழப்பு. அந்த நேரத்தில் பக்கபலமாக உதயநிதி சார் இருந்ததை மறக்க முடியாது. கனா திரைப்படத்தை தொடர்ந்து அருண் ராஜாவுடன் மீண்டும் இணைய விரும்புகிறேன். விரைவில் ஒரு நல்ல கதையை எனக்குச் சொல் என்று இந்த மேடையில் கேட்டுக்கொள்கிறேன்.
செய்வதை சரியாக செய்வார்..
வாழ்க்கையில் அதை செய்து விடவேண்டும், இதை செய்து விட வேண்டும் என்றெல்லாம் பெரிய கனவுகளை அவர் சொல்லி நான் பார்த்ததில்லை. ஆனால் தான் செய்வதை நேர்த்தியாகவும், சரியாகவும் செய்யக்கூடியவர் அருண். நண்பர்களை சேர்த்துக்கொண்டு ஒரு விஷயம் செய்தால் எந்த அளவுக்கு சிறப்பாக வரும் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்." என்று பேசியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8