சூர்யாவின் தயாரிப்பில்... கோலிவுட்டில் 'அறிமுகமாகும்' அருண் விஜய் மகன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வரும் அருண் விஜய் சினம், அக்னி சிறகுகள், பாக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அருண் விஜய்-ஆர்த்தி தம்பதியருக்கு அர்னவ் என்னும் மகனும், பூர்வி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் தன்னுடைய தாத்தா மற்றும் அப்பா வழியில் அருண் விஜயின் மகன் அர்னாவ் கோலிவுட்டில் குட்டி ஹீரோவாக களமிறங்குகிறார். நடிகர் சூர்யாவின் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் தான் அர்னவ் அறிமுகமாகவுள்ளார்.

நாளைக்கு இப்படத்தின் பூஜை சூர்யாவின் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாம். அறிமுக இயக்குநரின் உருவாகவிருக்கும் இப்படம் குழந்தைகளை மையமாக கொண்ட கதை என கூறப்படுகிறது. மேலும் மகனுக்காக இந்த படத்தில் அருண் விஜய் கேமியோ ரோல் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறாராம்.

சூர்யாவின் தயாரிப்பில்... கோலிவுட்டில் 'அறிமுகமாகும்' அருண் விஜய் மகன்! வீடியோ

Tags : Arun Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Arun VIjay's son Arnav making his debut in Kollywood

People looking for online information on Arun Vijay will find this news story useful.