அருண் விஜய் - ஹரி இணையும் 'யானை' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் அருண் விஜய் மற்றும்  இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை” படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Advertising
>
Advertising

நடிகர் அருண் விஜய், தனது மாமாவான இயக்குநர் ஹரி கூட்டணியில்  “யானை” திரைப்படம் முழுப்பணிகளும் விரைந்து முடிப்பதற்கான  பணிகள் நடந்து வருகிறது.  படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்திற்காக  இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில்  படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி.

யானை படம் பற்றிய அறிவிப்புகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த படம் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இது அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும்.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. மேலும் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

 

தொடர்புடைய இணைப்புகள்

Arun vijay Yaanai TN rights bagged by KKR Cinemas

People looking for online information on Arun Vijay, AV33, GV Prakash, Hari, Priya Bhavani Shankar, Yaanai will find this news story useful.