நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'ஓ மை டாக்' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ஒளிபரப்பாகியிருந்தது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | VIDEO: தங்கலான் ஷூட்டிங்கில் கிரிக்கெட்.. பிளிண்டாப் ஸ்டைலில் பவுலிங் போட்ட பா. ரஞ்சித்..!
வலிமை இல்லாத மாற்றுத்திறனாளி உயிரினங்களுக்கு இவ்வுலகில் வாழ தகுதியில்லை என நினைக்கும் ஒரு கொடூர வில்லனுக்கு எதிரான ஒரு சிறுவனுக்கும் நாய்க்குமான பாசப்போராட்டமாக ஓ மை டாக் திரைப்படம் அமைந்திருந்தது. அருண் விஜய்,. ஆர்ணவ் விஜய், விஜயகுமார் மற்றும் வினய் நடித்திருந்த இப்படத்தில் ஃபிளாஷ்பேக்கில் நடிகர் அருண் விஜய் குதிரைகளின் மீது பாசம் கொண்டவராக இருப்பார்.
அப்படி குதிரைகளின் மீது பாசம் கொண்ட அருண் விஜய், தான் ஆசையாய் பார்த்துக்கொண்ட குதிரையின் மரணத்தை தாங்க முடியாமல் தத்தளிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் உண்மையில் அருண் விஜய் பாசமாக குதிரையை வளர்க்கிறார் என்பது பலரும் அறியாத தகவல். ஆம், நடிகர் அருண் விஜய் தன் வீட்டில் குதிரை வளர்க்கக் கூடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக நடிகர் அருண் விஜய் இந்த ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், அந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தின்போது நடிகர் அருண் விஜய், “எங்கள் வீட்டில் இன்னொரு உறுப்பினர் இணைந்துள்ளார்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த ஃபோட்டோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
நடிகர் அருண் விஜய் அண்மைக் காலமாக மாஃபியா உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்துவந்த நிலையில், இயக்குநர் ஹரி இயக்கத்தில் யானை திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read | "வேலையாவே இருந்துட்டேன்.. நண்பர்களே இல்லை.. எங்க போய் நட்பை தேடுவேன்.!” - செல்வராகவன் உருக்கம்..