தல அஜித்தை தொடர்ந்து GLIMPSE வீடியோ வெளியிடும் அருண் விஜய்! எந்த படத்துக்கு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ரத்தின சிவா இயக்கிய ‘வா டீல்’ திரைப்படம் வரும் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

7 வருடமாக முடங்கியிருந்த இந்த திரைப்படம் இப்பொழுது மாநாடு, அண்ணாத்த, எனிமி படங்களுடன் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அருண் விஜயுடன் கார்த்திகா, வம்சி, ஜெயப்பிரகா, சதீஷ் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கிறார். இப்படத்தை ஹேம்நாத் மோகன் தயாரித்துள்ளார். ஜே.எஸ்.கே நிறுவனம் இந்த படத்தினை தியேட்டர்களில் வெளியிடுகிறது.

இந்நிலையில் தல அஜித் நடித்த வலிமை படத்திற்கு பிறகு இந்த படத்தின் முன்னோட்ட கிளிம்ப்ஸ் வீடியோ நாளை (அக்டோபர்-2) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 2015ல் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் நடிப்பில் அடுத்தாக பார்டர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Tags : Arun Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Arun vijay vaa deal movie glimpse release update

People looking for online information on Arun Vijay will find this news story useful.