"ரொம்ப தேங்க்ஸ் பிரதர், கண்டிப்பா பண்ணிடுறேன்" சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன அருண் விஜய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். மிகவும் வித்தியாசமான நடிப்பு மற்றும் ஃபிட்னஸ் உள்ளிட்டவற்றால் பலரையும் ஈர்த்துள்ள அருண் விஜய்யின் நடிப்பில், யானை, பார்டர், அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | BREAKING: கார்த்தி பிறந்தநாளில் ‘சர்தார்’ படத்தின் அடுத்த அப்டேட்…? வெளியான தகவல்!

இது தவிர, வேறு சில படங்களில் நடிக்கவும் அருண் விஜய் ஒப்பந்தமாகி உள்ளார். 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித்குமாருக்கு எதிராக விக்டர் என்னும் கதாபாத்திரத்தில் தோன்றிய அருண் விஜய்யின் நடிப்பை  ரசிகர்கள் பலரும் கொண்டாடினர்.

இதனையடுத்து, செக்கச் சிவந்த வானம், குற்றம் 23, தடம் உள்ளிட்ட பல படங்களும் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை பெற்று கொடுத்திருந்தது.

அருண் விஜய் ட்வீட்

கடைசியாக, குழந்தை மற்றும் நாயை மையமாக உருவாகி இருந்த 'ஓ மை டாக்' என்னும் திரைப்படத்தில் தனது மகன் அர்னவ் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் அருண் விஜய். அர்னவ் விஜய் நடித்த முதல் படம் இது தான். இந்நிலையில், தனது மகனின் பிறந்தநாளான இன்று (09.05.2022), வாழ்த்து சொல்லி ட்வீட் ஒன்றை அருண் விஜய் பகிர, சிவகார்த்திகேயன் கொடுத்த ரிப்ளை தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மகனின் பிறந்தநாள்

மகன் அர்னவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த அருண் விஜய், "அர்னவின் பிறந்தநாளில், உங்களின் அனைவரின் ஆசீர்வாதமும் அவனுக்கு வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம். லவ் யூ லோட்ஸ்.. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்

இதில், ரசிகர்கள் பலரும் அர்னவிற்கு பிறந்தநாள் வாழ்த்தினை கூறி, கமெண்ட் செய்திருந்த நிலையில்,  அருண் விஜய் ட்வீட்டை பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி. ஓ மை டாக் படத்தில், உங்களின் நடிப்பை ரசித்து பார்த்தேன். உங்கள் படிப்பு மற்றும் நடிப்பு பயணத்திற்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

நெகிழ்ந்து போன அருண் விஜய்

இதற்கு நன்றி சொல்லும் விதமாக, சிவகார்த்திகேயன் ட்வீட்டை பகிர்ந்த அருண் விஜய், "உங்களின் வாழ்த்திற்கு நன்றிகள் பிரதர். நிச்சயமாக உங்களின் வாழ்த்தினை அர்னவ்விடம் பகிர்ந்து கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார். இது தொடர்பான பதிவுகள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், கடைசியாக டாக்டர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த நிலையில், அடுத்ததாக மே 13 அன்று, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி உள்ள 'டான்' திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"ரொம்ப தேங்க்ஸ் பிரதர், கண்டிப்பா பண்ணிடுறேன்" சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன அருண் விஜய் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Arun vijay thanks sivakarthikeyan after he wish arnav vijay

People looking for online information on Arnav Vijay, Arun Vijay, அருண் விஜய், அர்னவ் விஜய், சிவகார்த்திகேயன், Sivakarthikeyan will find this news story useful.