புதிய தோற்றத்தில் அருண் விஜய் - பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் "யானை' பட PHOTO CARDS..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் - ஹரி இணையும் யானை படத்தின் புதிய போட்டோ கார்டுகள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | உலக புகழ் பெற்ற துருக்கி கடற்கரையில் நடிகை கனிகா! செம வைரல் போட்டோஸ்

நடிகர் அருண் விஜய், தனது மாமாவான இயக்குநர் ஹரி கூட்டணியில்  “யானை” திரைப்படம் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்தது.  இப்படத்திற்காக  இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில்  படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இது அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும்.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. மேலும் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த படம் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்

படத்தின் வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வெளியீட்டை ஒட்டி படத்தின் போட்டோ கார்டுகள் & போஸ்டர்கள் ஆகியவை திரையரங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோ கார்டுகளில் நடிகை பிரியா பவானி சங்கர் & அருண் விஜய் புதிய தோற்றத்தில் உள்ளனர்.

கல்லூரி மாணவியாக, தண்ணீர் பாணை சுமக்கும் கிராமத்து பெண்ணாக பிரியா பவானி சங்கர் தோற்றம் வரவேற்பைப் பெற்று வருகிறது. அருண் விஜய்யின் ஆக்ரோஷமான தோற்றமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Also Read | பிரபல OTT-யில் வெளியாகும் போத்தனூர் தபால் நிலையம்.. ரெட்ரோ ஸ்டைல்ல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Priya bhavani Shankar yaanai movie photo cards Released

People looking for online information on Arun Vijay, Priya Bhavani Shankar, Yaanai movie, Yaanai movie Release Updates will find this news story useful.