தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ 17,000 அடி வானில் குதிக்க இருந்தபோது எடுத்த அன்சீன் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா ஹீரோக்களில் மிகப்பெரும் இன்ஸ்பிரேஷனாக பார்க்கப்படும் நடிகர் அருண் விஜய். 1995-ம் ஆண்டு சினிமா துறைக்குள் நடிக்க தொடங்கிய அவரின் சினிமா பயணம் பல ஏற்ற இறங்கங்களோடு தான் தொடங்கியது.

பாண்டவர் பூமி உள்ளிட்ட நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்த அவர் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைத்தார். பின்னர் மலை மலை, தடையறத் தாக்க படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை கவனம் ஈர்த்தது.

ஆனால், கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் இவர் ஏற்றிருந்த விக்டர் வேடம் அருண் விஜய்க்கு ஒரு புது அடையாளத்தைக் கொடுத்தது. தொடர்ந்து படங்களில் மெருகேறிய நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகி இருக்கிறது.

அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஃபியா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதி காட்சிகளில் அருண் விஜய் பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே குதிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த காட்சியை படம்பிடிப்பதற்கு முன் எடுத்த புகைப்படங்களை அருண் விஜய் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Tags : Arun Vijay

Arun Vijay Posts behind scenes of Mafia Sky diving Scene 17,000 Feet | அருண் விஜய் மாஃபியா படத்தில் வானில் ஸ்கை டைவிங் செய்த காட்சி

People looking for online information on Arun Vijay will find this news story useful.