அருண் விஜய் நடித்து வரும் படங்களில் ஒன்று, அவரது மைத்துனர் ஹரி இயக்கம் பெயரிடப்படாத படம். அருண் விஜய் விஜய்க்கு அக்னி சிரகுகலள், பாக்ஸர், சினம் என பல படங்கள் அவர் கைவசம் இருக்கிறது. அதேபோல் சாமி படத்தை இயக்கிய ஹரி, சாமி ஸ்கொயர் படத்தை சமீபத்தில் இயக்கியிருந்தார். விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தப் படம் அருண் விஜய்யின் 33-வது படமாகவும், ஹரியின் 16-வது படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். ப்ரியா பவானி சங்கர், அருண் விஜய் இருவரும் மாபியா: அத்தியாயம் 1 படத்தில் கார்த்திநரேன் இயக்கத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். தற்போது குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் இணைந்துள்ளார். திரிஷா இல்லனா நயன்தாரா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் Drumstick Productions. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் துவங்கியது. எனினும் இயக்குனர் ஹரி சில வாரங்கள் முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தற்பொழுது நலமடைந்து திரும்பியிருக்கும் ஹரி இந்த படத்தின் ஷூட்டிங்கை துவங்கயுள்ளார். வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பழனியில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.