BREAKING : அருண் விஜய் - கார்த்திக் நரேனின் 'மாஃபியா' டீசர் குறித்த அறிவிப்பு இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது

அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படம் 'மாஃபியா'. இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை (செப்டம்பர்16) மாலை 6 மணிக்கு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஃபியா’ திரைப்படத்தின் டீஸரை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Karthik Naren Mafia Teaser Release On September 16th

People looking for online information on Arun Vijay, Karthick Naren, Lyca Productions, Mafia, Prasanna will find this news story useful.