ஹரி இயக்க அருண் விஜய் நடிக்கும் 'யானை'.. வெளியான மிரட்டலான கொல மாஸ் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை படத்தின் டிரைலர் இன்று (30.05.2022) வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கௌதம் மேனன் இயக்கும் SUPER HIT வெப்-சீரிஸின் 2-வது சீசன்.. BTS போட்டோவுடன் வெளியான மாஸ் அப்டேட்!

தனது மாமாவான இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் முதல் முறையாக இணையும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்தாண்டு வெளியிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் நடிகர் அருண் விஜய், தனது மாமாவான இயக்குநர் ஹரி கூட்டணியில்  “யானை” திரைப்படம் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்தது.  இப்படத்திற்காக  இராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில்  படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இது அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும்.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. மேலும் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த படம் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.

படத்தின் வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

படத்தின் ரிலீசை முன்னிட்டு தற்போது படத்தீன் டிரெய்லர் ரிலீசாகி உள்ளது. தூத்துகுடி வட்டார வழக்கில் அருண் விஜய் பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இறால் பண்னை சம்பந்தப்பட்ட காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளன. செண்டிமெண்ட் & ஆக்சன் காட்சிகள் நிறைந்து டிரெய்லர் காணப்படுகிறது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி காட்சிகள் டிரெய்லரில் அழகியல் தன்மையுடன் இடம் பெற்றுள்ளன.

Also Read | நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை சோனம் கபூரின் முதல் செல்ஃபி.. வைரலாகும் LATEST போட்டோ..!

ஹரி இயக்க அருண் விஜய் நடிக்கும் 'யானை'.. வெளியான மிரட்டலான கொல மாஸ் டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Hari Yaanai Movie Trailer Released

People looking for online information on Arun Vijay, Hari, Yaanai movie, Yaanai Movie Trailer Release will find this news story useful.