ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'யானை' படம் கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Also Read | பிரபல இளம் சினிமா பத்திரிகையாளர் கௌஷிக் LM மாரடைப்பால் மரணம்.!
உலகம் முழுவது 1500+ திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யானை படத்தில் நடிகர் அருண் விஜய் ரவி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் 'ஜெபமலர்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் நிறுவனம் (ZEE5 OTT & ZEE தமிழ்) கைப்பற்றியது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி முதல் ஜி5 தளத்தில் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்னோட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது.
Also Read | லோகேஷுடன் இயக்குனர் ரத்ன குமார்.. அடுத்த படம் பற்றி கொடுத்த ஹிண்ட்??