ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் - ஹரி இணையும் யானை படத்தின் சென்சார் போர்டு விவரங்கள் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மைக் மோகன் படத்தில் யோகிபாபுவின் அசத்தல் கேரக்டர்.. தெறிக்கவிடும் BTS புகைப்படங்கள்.!

யானை, அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும்.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. மேலும் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள், முன்னோட்டம் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக  இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில்  படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த படம் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.

படத்தின் வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் யானை படம் சென்சார் போர்டால் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை பிரத்யேக போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.

யானை படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Also Read | விக்ரம் சக்சஸ் மீட்-க்கு சமைச்ச பிரபல இளம் ஹீரோ.. இவரு Chef-ஆம்பா.. வைரல் போஸட்!

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Hari Yaanai Movie CBFC Censored UA

People looking for online information on Arun Vijay, Director Hari, Priya Bhavani Shankar, Yaanai, Yaanai Movie Updates will find this news story useful.