அருண் விஜய் - எமி ஜாக்சன் - நிமிஷா நடிக்கும் புதிய படம்.. மாஸ் டைட்டிலுடன் வெளியான சூப்பர் GLIMPSE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு பிரத்யேக வீடியோ மூலம் வெளியாகி உள்ளது.

Arun Vijay Amy Jackson Nimisha Sajayan New Movie Acham Ennathu Illayae
Advertising
>
Advertising

Also Read | இஸ்லாமிய பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளியான புதிய படத்தின் 1st லுக் போஸ்டர்!

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் 'யானை' & 'சினம்' ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதேபோல் சோனி லிவ் தளத்தில் தமிழ் ராக்கர்ஸ் சீரிஸூம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Arun Vijay Amy Jackson Nimisha Sajayan New Movie Acham Ennathu Illayae

அருண் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் A.L விஜய் உடன் இணைந்துள்ளார். இந்த புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்றது . ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அருண் விஜய்யுடன் நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு "அச்சம் என்பது இல்லையே" என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க லண்டன் பின்னணியில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

இந்த படத்தின் முதல் கட்ட லண்டன் படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழு  சென்னை திரும்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | இளம் ஹீரோயினுடன் சந்தானம் நடிக்கும் புதிய படம்.. OTT & TV உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Amy Jackson Nimisha Sajayan New Movie Acham Ennathu Illayae

People looking for online information on Acham Ennathu Illayae Movie, Amy Jackson, Arun Vijay, Nimisha Sajayan will find this news story useful.