வெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் இணையும் அருள்நிதி? ஆஹா செம்ம COMBO இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: அருள்நிதியின் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. தயாரிப்பாளர் வெளியிட்ட பரபர அறிக்கை

தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடிக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அருள்நிதி.

இவரின் வித்தியாசமான திரைக்கதை தேர்வுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக டிமாண்டி காலனி, கே 13, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற த்ரில்லர் படங்கள் அருள்நிதியை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

அருள்நிதி நடிப்பில் டைரி, தேஜாவு,டி பிளாக் படங்கள் ரிலீசாகி உள்ளன. இதில் டைரி படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கி இருந்தார். இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமாண்டி காலணி படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோப்ரா படத்தின் இணை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் டைரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்னாசி பாண்டியன் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோவாக அருள்நிதி நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரில்லர் பாணியில் அமைந்த டைரி படத்தில் போலிஸ் அதிகாரியாக அருள்நிதி நடித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 8 பேக் உடற்கட்டில் ஷாருக்கான்.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய பதான் படத்தின் மிரட்டலான BTS PHOTO!

தொடர்புடைய இணைப்புகள்

Arulnithi Next Movie To Be Directed By Innasi Pandiyan

People looking for online information on Arulnithi, Arulnithi Next Movie, Innasi Pandiyan will find this news story useful.