அருள் நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி - 2 உருவாகிறதா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: அருள்நிதியின் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Arulnithi next doing a blockbuster sequel of Demonty Colony
Advertising
>
Advertising

தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடிக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் அருள்நிதி. இவரின் வித்தியாசமான திரைக்கதை தேர்வுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

குறிப்பாக டிமாண்டி காலனி, கே 13, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற த்ரில்லர் படங்கள் அருள்நிதியை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.இந்த ஆண்டு வெளியான களத்தில் சந்திப்போம் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் டைரி, தேஜாவு பட்ங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

Arulnithi next doing a blockbuster sequel of Demonty Colony

டைரி படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர்      அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமாண்டி காலணி படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து அருள்நிதி நடிக்கும் புதிய படத்தை பிரபல விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் தயாரிக்கிறார். இது இவரின் முதல் தயாரிப்பாகும். ஜோதிகாவை வைத்து ராட்சசி படத்தை இயக்கிய இயக்குனர் Sy.கௌதம் ராஜ் இந்த படத்தை இயக்க இருக்கிறார். 

இந்த படங்களை தொடர்ந்து அருள்நிதி டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அறிமுக இயக்குனர் வெங்கி (அஜய் ஞானமுத்துவின் அசோசியேட்) இந்த படத்தை இயக்க உள்ளார்.இந்த படத்தின் கதை திரைக்கதையை அஜய் ஞானமுத்து எழுதி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் டிமாண்டி காலனி முதல் பாகத்தை இயக்கியவர். 

Tags : Arul Nithi

மற்ற செய்திகள்

Arulnithi next doing a blockbuster sequel of Demonty Colony

People looking for online information on Arul Nithi will find this news story useful.